கல்கரியில் வீடு தீப்பிடித்ததில் இருவர் ஆபத்தான நிலையில்
கல்கரியின் தென்கிழக்கு பகுதியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
டோவர் பகுதியில் உள்ள டோவர்தோர்ன் க்ளோஸ் எஸ்.இ.யின் 100ஆம் தொகுதியில் அமைந்திருந்த வீட்டில் அதிகாலை தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள், வீட்டிலிருந்து லேசான புகை வெளியேறுவதைக் கண்டனர்.

தொடர்ந்து மேற்கொண்ட சோதனையில், வீட்டின் அடித்தளத்தில் தீப்பற்றியிருந்தது தெரியவந்தது. வீட்டுக்குள் தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டபோது, அங்கு வசித்து வந்த இருவர் தீயணைப்பு வீரர்களால் மீட்கப்பட்டனர்.
இருவரும் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மேலும், வீட்டுக்குள் உயிரிழந்த நிலையில் ஒரு பூனையும் கண்டெடுக்கப்பட்டது.
தீ விபத்து ஏற்பட்ட வீட்டின் வெளிப்புறத்தில் பெரிய அளவில் சேதம் எதுவும் காணப்படவில்லை. அடித்தளத்தில் இருந்த ஜன்னல் ஒன்று உடைந்திருந்தது மட்டும் வெளிப்படையாகத் தெரிந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.