தென் அமெரிக்கவில் ரயில்கள் நேருக்கு நேர் மோதி 2 பேர் பலி
தென் அமெரிக்க நாடான சிலியின் தலைநகர் சாண்டியாகோவில் இரண்டு ரயில்களும் நேருக்கு நேர் மோதி 2 பேர் உயிரிழந்துள்ளதுடன் 4 சீனர்கள் உட்பட 9 பேர் படுகாயமடைந்தனர்.
வேக சோதனைக்காக இயக்கப்பட்ட இந்த ரயிலில் 10 ஊழியர்கள் பயணம் செய்தனர். இதற்கிடையில், 1,500 டன் தாமிரத்தை ஏற்றிச் செல்லும் சரக்கு ரயில் ஒன்றும் அந்த வழியாகச் சென்று கொண்டிருந்த போது இரண்டு ரயில்களும் நேருக்கு நேர் மோதிலே குறிந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு மீட்புப் படையினர் விரைந்தனர். அவர்கள் அங்கு சென்று ரயிலின் பெட்டிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். மறுபுறம் ரயில் பெட்டிகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி, காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவத்தால் ரயில் போக்குவரத்து பல மணி நேரம் பாதிக்கப்பட்டதுடன் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு கேப்ரியல் போரிக் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
மேலும் விபத்துக்கான காரணம் குறித்து உரிய விசாரணை நடத்தவும் உத்தரவிட்டார்.