கனடாவில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் இரண்டு பேர் காயம்
கனடாவின் பார்க்டேல் பகுதியில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதல் சம்பவத்தில் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர்.
குயின்ஸ் வீதி மற்றும் லேண்ட்ஸ் டவுன் வீதி என்பவற்றுக்கு அருகாமையில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தாக்குதல் சம்பவம் ஒன்று குடியிருப்பு தொகுதி ஒன்றில் இடம்பெற்றதாக பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாட்டை தொடர்ந்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.
இதன்போது இரண்டு பேர் கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்காகி, காயமடைந்த நிலையில் இருந்ததனை பொலிஸார் அவதானித்துள்ளனர்.
சம்பவத்தில் காயமடைந்தவர்களை பொலிஸார் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
குறித்த இருவருக்கும் உயிர் ஆபத்து கிடையாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த கத்திக்குத்து தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் பொலிஸாருக்கு அறிவிக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        