கனடாவில் பஸ் தரிப்பிடத்தில் இடம்பெற்ற விபத்தில் பெண் பலி
கனடாவின் பிக்கரிங் நகரில், பஸ் மோதி வந்த வாகனத்தை தொடர்ந்து ஏற்பட்ட கோர விபத்தில் 31 வயதான பெண் ஒருவர் உயிரிழந்துள்ளர்.
மேலும் 26 வயதான ஆண் ஒருவர் கடுமையான காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
பிக்கரிங்கில் உள்ள Kingston சாலையில் Brock மற்றும் Valley Farm சாலைகளுக்கிடையில், வாகன விபத்து இடம்பெற்றுள்ளதாக டர்ஹம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.
கிங்ஸ்டன் சாலையில் மேற்கு திசையில் சென்ற வாகனம், அதே திசையில் சென்ற இரண்டு வாகனங்களை மோதிய பின்னர் சாலையிலிருந்து விலகி பஸ் தரிப்பிடத்திற்கு நுழைந்ததாக கூறப்பட்டுள்ளது.
அப்போது பஸ் தரிப்பிடத்தில் காத்திருந்த இரண்டு பேர் அந்த வாகனத்தால் மோதப்பட்டனர்.
விபத்துக்குள்ளான இருவரும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
ஆனால், அந்த 31 வயது பெண், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
26 வயதான ஆண் மிகக் கடுமையான காயங்களுடன் சிகிச்சையில் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் ஈடுபட்ட வாகன ஓட்டுனர் சம்பவ இடத்தில் இருந்து எங்கும் செல்லவில்லை எனவும் அவர் தற்போது காவல்துறையுடன் முழுமையாக ஒத்துழைத்து வருகிறார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.