அமெரிக்காவில் இரு விமானங்கள் மோதி பாரிய தீ விபத்து; உயிராபத்து இல்லை
அமெரிக்காவில் விமான நிலைய ஓடுபாதையில் இரண்டு விமானங்கள் மோதி பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் ஒருவருக்கும் பெரிய காயங்கள் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மொன்டானா மாநிலத்தில் திங்கட்கிழமை விமான நிலையத்தில் தரையிறங்கிய ஒரு சிறிய ரக விமானம் ஓடுபாதையில் நிறுத்தப்பட்டிருந்த மற்றுமொரு விமானத்தின் மீது மோதி தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
நிறுத்தப்பட்டிருந்த பல விமானங்களை மோதியது
ஒற்றை இயந்திர விமானம் ஒன்று நான்கு பேருடன் வொஷிங்டனின் புல்மேனில் இருந்த புறப்பட்டு பிற்பகல் 2 மணியளவில் கலிஸ்பெல் நகர விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றுள்ளது.
இதன்போது, விமானியின் கட்டுப்பாட்டை இழந்து விமானம் ஓடுபாதையிலும், பின்னர் நிறுத்தப்பட்டிருந்த பல விமானங்களை மோதியது.
இதன்போது ஏற்பட்ட தீ புல்வெளி பகுதிக்கும் பரவியதாக கலிஸ்பெல் பொலிஸ் அதிகாரி ஜோர்டான் வெனிசியோ தெரிவித்துள்ளார்.
விபத்தை அடுத்து விமானத்திலிருந்து பயணிகள் தாங்களாகவே வெளியேறியதாக தெரிவித்த அதிகாரிகள் , இருவர் லேசான காயமடைந்து சிகிச்சை பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.