டொரன்டோவில் வாகன விபத்தில் 2 வயது சிறுவன் பரிதாப மரணம்
டொரன்டோவின் மிமிக்கும் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்து சம்பவம் ஒன்றில் இரண்டு வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.
டொரன்டோவின் ஆல்பர்ட் அவென்யூ மற்றும் லேக் ஷோ பகுதிகளுக்கு அருகாமையில் இந்த விபத்து சம்பவம் பதிவாகியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் அறிந்து கொண்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்த போது சிறுவன் படுகாயம் அடைந்த நிலையில் உயிருக்கு போராடுவதை அவதானித்துள்ளனர்.
உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிர் இழந்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய வாகன சாரதி சம்பவ இடத்தில் இருந்தார் எனவும் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கினார் எனவும் போலீசார் தெரிவிக்கின்றனர்.
இந்த விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
சிறுவன், பெற்றோருடன் இருந்த சந்தர்ப்பத்தில் இந்த விபத்து இடம் பெற்றுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்