மாதம் 20 நாட்கள் லீவு; மழைப்போல் கொட்டும் சம்பளம்! வைரலாகும் விளம்பரம்!
மாதம் 20 நாட்கள் விடுமுறை, மீதமுள்ள நாட்களுக்கு கவர்ச்சிகர ஊதியம் வழங்குவதாக கூறும் விளம்பர பதிவு ஒன்று வைரலாகி வருகிறது.
அவுஸ்திரேலியாவின் புளூகிபன் மருத்துவ நிறுவனம் பிரிட்டன் மருத்துவர்களை பணியில் அமர்த்த மிகவும் கவர்ச்சிகர விளம்பரத்தை வெளியிட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவுக்கு வாங்க
இந்த விளம்பரம் தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த விளம்பரப் பதிவில்,
How depressing to see this in the BMJ. It’s hard to say those figures don’t present a compelling argument. It all leads to a big question for the govt: if you don’t address doctors’ very reasonable pay concerns, alongside their conditions and wellbeing, guess where they’re going? pic.twitter.com/24oKKrgfLa
— Adam Kay (@amateuradam) May 3, 2023
“டாக்டர் ஆடம் கே ஃபீலிங் வந்துவிட்டதா? அவுஸ்திரேலியாவுக்கு வாங்க! பிரிட்டனை சேர்ந்த மருத்துவராக இருக்க வேண்டும்.
மாதம் 10 ஷிஃப்டுகள் மட்டும் வேலை செய்து, 20 நாட்களுக்கு விடுமுறை எடுத்துக்கொள்ளலாம்.” ஆண்டு வருமானம் 2 லட்சத்து 40 ஆயிரம் டொலர்கள், அத்துடன் தங்கும் இடம் வழங்கப்படும்.
சைன்-இன் போனஸ் தொகையாக ரூ. 2.7 இலட்சம் வழங்கப்படும்,” என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இந்த விளம்பரம் பிரிடிஷ் மருத்துவ இதழின் வலைதளத்தில் பதிவிடப்பட்டு இருக்கிறது.
இந்த விளம்பரத்தை எழுத்தாளர் மற்றும் முன்னாள் மருத்துவ நிபுணர் ஆடம் கே தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.