அமெரிக்காவில் டிரம்ப் அதிரடியால் பாதிக்கப்படவுள்ள 2 கோடி குடும்பங்கள்!
அமெரிக்காவில் டிரம்ப் ஜனாதிபதியாக பதவியேற்றாஅவுடன், தேசிய அளவில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட உள்ளதுடன் புலம்பெயர்ந்தவர்களை நாடு கடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டிரம்பின் இந்த நடவடிக்கையால் நேரடியாக சுமார் 2 கோடி குடும்பங்களை பாதிக்கும் என்று கூறப்படுகிறது.
புலம்பெயர்ந்தவர்கள் நாடு கடத்தப்படுவார்கள்
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டொனால்டு ட்ரம்ப் தேர்தல் பிரச்சாரத்தின் போது, சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றுவேன் என்றும், புலம்பெயர்ந்தவர்களை நாடு கடத்துவேன் என்றும் கூறியிருந்தார்.
குறிப்பாக, மெக்சிகோ எல்லையை உறுதிப்படுத்துவேன் என்றும் அவர் கூறியிருந்தார். இந்த நிலையில், அவர் வெற்றி பெற்று அதிபராக இருக்கும் நிலையில், அவரது முதல் நடவடிக்கையாக தேசிய அளவில் அவசர நிலை பிரகடனம் செய்வது, அதன்பின் புலம்பெயர்ந்தவர்கள் நாடு கடத்தப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது.
டிரம்ப் அதிபராக இன்னும் ஒரு மாதத்திற்கும் மேல் இருக்கும் நிலையில், "இப்போதே நீங்கள் பேக்கிங் செய்து நாட்டை விட்டு வெளியேறுவது நல்லது" என்று டிரம்ப் ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
இதனால் அமெரிக்காவில் கிட்டத்தட்ட ஒரு கோடிக்கும் அதிகமாக சட்டவிரோதமாக தங்கி இருக்கும் புலம்பெயர்ந்தவர்கள் அதிர்ச்சி அடைந்திருப்பதாக கூறப்படுகிறது.