கனடாவில் காயங்களுடன் மீட்கப்பட்ட 20 வயது இளைஞர் உயிரிழப்பு
கனடாவின் சஸ்காட்செவன் மாகாணத்திலுள்ள பிரின்ஸ் அல்பர்ட் நகரில், படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 20 வயது இளைஞர் ஒருவர் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
கடந்த ஒக்டோபர் 10ஆம் திகதி சனிக்கிழமை அதிகாலை 2.05 மணியளவில், பிரின்ஸ் அல்பர்ட் நகரின் மேற்கு 17ஆவது வீதியின் 1600ஆம் இலக்கப் பகுதியில் அமைந்துள்ள வீட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாகக் கிடைத்த தகவலையடுத்து பொலிஸார் அங்கு சென்றுள்ளனர்.
இதன்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் காயமடைந்திருந்த இளைஞரை மீட்ட பொலிஸார், பார்க்லேண்ட் அவசர மருத்துவ சேவை ஊடாக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

எனினும், சிகிச்சை பெற்று வந்த அவர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்ததாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் பிரின்ஸ் அல்பர்ட் பொலிஸ் சேவையின் பாரிய குற்றப்பிரிவு மற்றும் தடயவியல் அடையாளப் பிரிவினர், சஸ்காட்செவன் மரண விசாரணைச் சேவையுடன் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
உயிரிழப்புக்கான காரணத்தைக் கண்டறிவதற்கான பிரேதப் பரிசோதனைக்கான திகதி இதுவரை தீர்மானிக்கப்படவில்லை. இந்தச் சம்பவம் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் தம்மைத் தொடர்புகொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளன