நியூ பிரன்சுவிக்கில் பெருமளவு போதை மாத்திரைகள் மீட்பு
நியூ பிரன்சுவிக் பொலிஸார் பாரியளவில் போதை மாத்திரைகளை மீட்டுள்ளனர்.
கடந்த வார இறுதியில் பெருமளவில் போதைப்பொருட்களை பொலிஸார் மீட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
மரங்களினால் அடர்ந்த காட்டுப் பகுதியொன்றில் சுமார் 40,000 மாத்திரைகள் கைப்பற்றப்பட்டது வேறு விசாரணைக்காக தேடுதல் நடத்தி வந்த போது இந்த போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளது.
இந்த போதை மாத்திரைகளின் சுமார் 18 கிலோ கிராம் என தெரிவிக்கப்படுகிறது.
அதிகாரிகள், இது மெத்தாம்ஃபெட்டமின் (Methamphetamine) மாத்திரைகள் என சந்தேகிக்கின்றனர்.
போதைப்பொருட்களின் சந்தை மதிப்பு $200,000 வரை இருக்கலாம் என பொலிஸார் கருதுகின்றனர்.
கடந்த சில மாதங்களில் அந்த பகுதியில் சந்தேகத்திற்கிடமான செயல்பாடுகளைக் கண்டவர்கள் ஏதேனும் தகவல் தெரிந்தால், உடனடியாக தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் கோரியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.