2022 எப்படி இருக்கும்? 16ஆம் நூற்றாண்டு ஜோதிட நிபுணர் நாஸ்ட்ரடாமஸ் முன்கூட்டியே கணித்துள்ள விடயங்கள்
பிரான்சில் பிறந்தவரான ஜோதிட நிபுணரான நாஸ்ட்ரடாமஸ் எழுதிய புத்தகம் 'Les Propheties'.
1555ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அந்த புத்தகத்தில், எதிர்காலத்தில் என்னென்ன நடக்கும் என ஏராளமான விடயங்களை எழுதி வைத்திருக்கிறார் நாஸ்ட்ரடாமஸ்.
அவற்றில், அமெரிக்க இரட்டைக் கோபுரம் தகர்ப்பு முதலிய விடயங்கள் மிகவும் பிரபலம் ஆகும்.
நாஸ்ட்ரடாமஸின் புத்தகம் வெளியாகி 400 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டாலும், இன்னமும் அவர் அடுத்த ஆண்டைக் குறித்து என்ன சொல்லியிருக்கிறார் என எதிர்பார்ப்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
அவ்வகையில், அவர் எதிர்காலம் குறித்து என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா?
ஏற்கனவே கொரோனாவால் உலகம் ஒரு வழியாகிவிட்ட நிலையில், எதிர்காலத்தில் ஒரு விண்கல் அல்லது சிறுகோள் (asteroid) பூமியைத் தாக்கும் என்றும், பெருவெள்ளங்களூம் வறட்சியும் அனைத்து நாடுகளையும் கதறவிடும் என்றும், ஒரு பெரும் பட்டினிப்பிரச்சினையை சந்திக்க வேண்டி வரும் என்றும் கூறி கலங்கடித்துள்ளார் நாஸ்ட்ரடாமஸ்.
புவி வெப்பமயமாதல்
பருவநிலை மாற்றங்கள் காரணமாக, புவி வெப்பமயமாவதால், கடலில் வாழும் மீன்கள் பாதி வெந்துபோகும் என்றும், உணவுப்பற்றாக்குறை காரணமாக மக்கள் அந்த மீன்களை வெட்டி உண்ணுவார்கள் என்றும் கூறியுள்ளார் நாஸ்ட்ரடாமஸ்.
40 ஆண்டுகளுக்கு மழையே பெய்யாது என்றும், அதனால் கடும் வறட்சி ஏற்படும் என்றும், அதற்குப் பிறகு 40 ஆண்டுகள் மழை கொட்டித்தீர்க்கும் என்றும், அதனால் பெருவெள்ளங்கள் ஏற்படும் என்றும் கூறியுள்ளார் அவர்.
உலகம் ஏற்கனவே அதீத வெப்பத்தையும் பெருவெள்ளங்களையும் சந்தித்துவருவதைக் கண்கூடாகவே காண்கிறோம்.
ஐக்கிய நாடுகள் சபையும், பூமியின் வெப்பநிலை அடுத்த 20 ஆண்டுகளுக்குள் 1.5 டிகிரி செல்ஷியஸ் அதிகரிக்கலாம் என எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
விண்கல் தாக்குதல்
பூமியை விண்கல் அல்லது குறுங்கோள் ஒன்று தாக்கும் என்றும் அதனால் ஏராளமானோர் உயிரிழப்பார்கள் என்றும் நாஸ்ட்ரடாமஸ் கணித்துள்ளார்.
ஏற்கனவே சமீபத்தில் உலகம் விண்கல்கள் குறித்த விடயங்களைக் கேள்விப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு துவக்கத்தில் பெரிய விண்கல் ஒன்று பூமியை நெருங்கி வந்து, சற்றே தொலைவில் பூமியின் மீது மோதாமல் விலகிச் சென்றதைக் குறித்த செய்திகள் வெளியானது நினைவிருக்கலாம்.
பண வீக்கத்தால் பட்டினி
பண வீக்கம் காரணமாக விலைவாசி உயர்வு, பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டு, உலகம் முழுவதும் பட்டினிப் பிரச்சினையை சந்திக்கும் என்றும் நாஸ்ட்ரடாமஸ் கணித்துள்ளார்.
உலகம் முழுவதும் பல நாடுகள் அரசியல் நிலைத்தன்மை இல்லாமல், ஒரு பக்கம் கொள்ளைநோயும் சேர்ந்துகொள்ள, எரிவாயு தட்டுப்பாடு காரணமாக பண வீக்கம் ஏற்பட்டு, உணவுப்பொருட்கள் விலைவாசி உயர்வு ஏற்பட்டு வருவதையும் காணமுடிகிறது.
செயற்கை அறிவுத்திறன் தொழில்நுட்பத்தின் தாக்கம்
செயற்கை அறிவுத்திறன் தொழில்நுட்பத்தின் (AI technology) தாக்கம் குறித்தும் நாஸ்ட்ரடாமஸ் கணித்துள்ளார்.
செயற்கை அறிவுத்திறன் தொழில்நுட்பத்தின் தாக்கத்தால் மனிதர்கள் மரணத்தைக் காணாதவர்களாக மாறுவார்கள் என்பதுபோன்ற ஒரு விடயத்தை நாஸ்ட்ரடாமஸ் கூறியுள்ளார்.
அவர் செயற்கை அறிவுத்திறன் கொண்ட ரோபோக்கள் குறித்தே அவ்விதம் கூறியிருக்கலாம் என கருதப்படுகிறது.
தற்கால அறிஞர்கள் பலரும், தொழில்நுட்பத்தை அதிகம் சார்ந்திருப்பதால் எதிர்மறையான விடயங்கள் பலவற்றை மனிதன் சந்திக்க நேரிடலாம் என எச்சரிக்கிறார்கள்.
சமீபத்தில் கூட, டெஸ்லா நிறுவன முதன்மை செயல் அதிகாரியான எலான் மஸ்க், ஆபத்தான மற்றும் ஆர்வமற்ற தொழில்களில் வேலை செய்வதற்கு மனிதர்களுக்கு பதிலாக மனிதர்கள் போலவே காணப்படும் ரோபோக்களை தயார் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.