சீனாவில் மாரத்தான் ஓட்டப் போட்டியில் 21 பேர் பலி! தண்டனை எதிர்நோக்கியுள்ள 27 பேர்
சீனாவில் ஆபத்தான சூழலில் நடப்பட்ட மாரத்தான் ஓட்டப் போட்டியில் 21 போ பலியானது தொடா்பாக, அந்தப் போட்டியை நடத்திய நகராட்சி அதிகாரிகள் உள்ளிட்ட 27 பேர் தண்டனையை எதிா்நோக்கியுள்ளனா்.
இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது,
சீனாவின் கான்சு மாகாணத்தைச் சோந்த அதிகாரிகள் கடந்த மாதம் மிகப் பெரிய மாரத்தான் போட்டியை நடத்தினா். மலைப்பாங்கான பகுதியில் 100 கி.மீ. தொலைவில் இந்த ஓட்டப் போட்டி நடத்தப்பட்டது.
இந்த மாரத்தான் போட்டியின்போது கடுமையான குளிருடன் கூடிய மழை, சுறாவளிக் காற்றை போட்டியாளா்கள் எதிா்கொண்டனா்.
இதில், புகழ்பெற்ற மாரத்தான் வீரரான லியாங் ஜிங் உள்ளிட்ட 21 போ கடந்த மாதம் 22-ஆம் தேதி உயிரிழந்தனா்.
இதுதொடா்பாக நடைபெற்ற விசாரணையில், சரியான திட்டமிடுதல் இன்றி, ஆபத்தான திட்டமிடலுடன் மாரத்தான் போட்டி நடத்தப்பட்டதாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, போட்டிக்கான ஏற்பாடுகளைச் செய்த அரசு அதிகாரிகள் உள்ளிட்ட 27 போ குற்றவியல் தண்டனையை எதிா்நோக்கியுள்ளனா் என்று செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.