கனடாவில் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட நபர் கைது
கனடாவின் பீல் பிராந்தியத்தில் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட நபர் ஒருவரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
பீல் பொலிஸார் சில மாதங்களாக முன்னெடுத்த விசாரணைகளின் அடிப்படையில் குறித்த நபரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபருக்கு 21 வயது எனத் தெரிவிக்கப்படுகின்றது.
2024 டிசம்பர் மாதத்தில் தொடங்கப்பட்ட இந்த விசாரணையின் ஒரு பகுதியாக, கடந்த மாதம் ஒன்டாரியோவில் உள்ள மில்க்ரோவ் பகுதியில் உள்ள ஒரு வீட்டில், தேடுதல் உத்தரவு அமல்படுத்தப்பட்டது.
இந்த தேடுதலின் போது இரண்டு ரிஸ்ட்ரிக்டட் வகை துப்பாக்கிகள், கோகெயின் மற்றும் ஒபியோயிட்கள் எனும் உயர் வகை போதைப்பொருள்கள், மேலும் மிகுதியான கனடிய டாலர்கள் மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த விசாரணையின் பின்னர், 21 வயதுடைய ஈதன் வில்லியம்ஸ்-கோவலிக் என்பவருக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
குறித்த நபர் ப்ராம்ப்டனில் பிணை விசாரணைக்காக காவலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேக நபர் பற்றிய தகவல்கள் இருந்தால் பொலிஸாருக்கு வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.