டிரம்பின் ஆதரவாளரை சுட்டுக்கொன்ற 22 வயது இளைஞன் கைது
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பின் தீவிர ஆதரவாளரும், வலதுசாரி ஆர்வலருமான சார்லி கிர்க், கொலை வழக்கில் தேடி வந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவர் உட்டா பல்கலைக் கழகத்தில் கடந்த 10ஆம் திகதி ஒரு நிகழ்ச்சியில் பேசிக் கொண்டிருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டார்.
கொலையாளியின் புகைப்படத்தை பொலிஸார் வெளியிட்டு தேடி வந்த நிலையில் 3 நாட்களுக்கு பிறகு 22 வயது டெய்லர் ராபின்சன் என்ற இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
டெய்லர் ராபின்சனை கைது செய்ய அவரது குடும்பத்தினரும், நண்பரும் உதவியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ராபின்சன் எந்த கட்சி அல்லது அமைப்பையும் சேர்ந்தவர் அல்ல. ஆனால் பாசிசத்தை எதிர்க்கும் குழுவில் இருந்தார்.
இதனால் பாசிசத்தின் மீதான வெறுப்புதான் சார்லி கிர்க்கை டெய்லர் ராபின்சன் கொலை செய்த தற்கான காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
டெய்லர் ராபின்சன் பயன்படுத்திய துப்பாக்கியும் மீட்கப் பட்டுள்ளது. துப்பாக்கியுடன் மீட்கப்பட்ட ஷெல் உறை களில் பாசிசத்துக்கு எதிரான சின்னங்கள், பாடல் வரி பொறிக்கப்பட்டு இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.