கனடாவில் பனிச்சறுக்கு பயிற்சியில் ஈடுபட்ட யுவதிக்கு நேர்ந்த விபரீதம்
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவின் சீ டூ ஸ்கை Sea to Sky பகுதியில் உள்ள பிரபலமான செக் கென்யோன் ரீகிரியேசன் Chek Canyon Recreation Area-வில், பனிச்சறுக்குப் பயிற்சி செய்யும் போது கீழே விழுந்து ஒரு இளம்பெண் உயிரிழந்தார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த துயர சம்பவம் வெள்ளிக்கிழமை மதியம் 12:30 மணியளவில் நிகழ்ந்தது என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
22 வயதுடைய பெண், பனிச்சறுக்குப் பயிற்சியின் போது தவறி விழுந்ததாக தகவல் வந்ததைத் தொடர்ந்து, அவசர உதவிக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
எனினும், குறித்த பெண் உயிரிழந்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், சம்பவம் இடம்பெற்ற கனியனின் அடிவார பகுதியை அடைவது கடினமானதால், உடலை மீட்பதற்காக மீட்புக் குழுவினர் அழைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரிட்டிஷ் கொலம்பிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.