வடக்கு ஒன்றாரியோவில் 27 இடங்களில் காட்டுத்தீ
கனடாவின் வடக்கு ஒன்றாரியோ பகுதியில் சுமார் 27 இடங்களில் காட்டுத்தீ பரவுகை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வட கிழக்கு பகுதியில் இவ்வாறு காட்டுத்தை அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த காட்டுத்தீச் சம்பவங்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் இவற்றில் ஐந்து காட்டு தீ சம்பவங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஒப்பீட்டளவில் இந்தக் காட்டுத்தீ சம்பவங்கள் பாரதூரமான ஆபத்துக்களை ஏற்படுத்தக் கூடியவை அல்ல என தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவங்கள் தொடர்பில் கண்காணிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டில் கனடாவின் சில பகுதிகளில் பாரியளவிலான காட்டுத் தீ சம்பவங்களினால் பேரழிவுகள் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        