அமெரிக்காவில் கணவனை கொன்று விட்டு தற்கொலை செய்துகொண்ட இளம் மாடல் அழகி!
அமெரிக்காவில் மாடல் அழகியான இளம்பெண் தனது கணவனை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா - புளோரிடாவில் உள்ள சொகுசு வீடொன்றில் 27 வயதான மாடல் அழகி ஒருவர் தன்னுடைய கணவரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்ததுடன் தற்கொலையும் செய்து கொண்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கடந்த புதன்கிழமை 12:30am மணியளவில் 1830 தெற்கு கடற்கரையில் (Ocean Drive) உள்ள பீச் கிளப் II ஹாலெண்டேலில் (Beach Club II Hallendale) கேட்கப்பட்ட பல துப்பாக்கிக் சூடு சம்பவங்களுக்கு பதிலளித்த பொலிஸார்,
பஜ்திம் கிராஸ்னிகி (34), மற்றும் அவரது மனைவி சப்ரினா கிராஸ்னிகி (27) இருவரையும் சடலமாக அவர்களது வீட்டின் பால்கனியில் கண்டுபிடித்தாக தெரிவித்தனர்.
கணவன் மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாக பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவத்தை பொலிஸார் தீவிரமாக விசாரித்து வருவதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், மாடல் அழகியான 27 வயது ப்ரினா கிராஸ்னிகி எதற்காக தன்னுடைய கணவரை துப்பாக்கியால் சுட்டார் என்பது குறித்தும் ஆராய்ந்து வருகின்றனர்.
ப்ரினா கிராஸ்னிகி 2021ம் ஆண்டு இன்சைட் எடிஷன் பிரிவில் மாடல் அழகியாக இடம் பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.