நயாகராவில் 4,000க்கு மேற்பட்ட கஞ்சா செடிகள் மீட்பு; இருவர் கைது
நயாகரா பகுதியில் 4,000க்கு மேற்பட்ட சட்டவிரோத கஞ்சா செடிகளை கைப்பற்றியதுடன் இரண்டு பெரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மிசிசாகாவைச் சேர்ந்த இரண்டு நபர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டதாக ஒன்றாரியோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கனடிய சுகாதாரத்துறை ஆய்வாளர்களிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில், வெயின்ஃப்லீட் பகுதியில் ஹைவே 3 அருகே பொலிஸார் சுற்றிவளைப்பு நடத்தியுள்ளனர்.
சம்பவ இடத்திலிருந்து 4,098 கஞ்சா செடிகள் மற்றும் 15 கிலோகிராம் உலர்த்தப்பட்ட மற்றும் செயல்படுத்தப்பட்ட கஞ்சா போதைப் பொருள் மீட்கப்பட்டது.
"கைபற்றப்பட்ட கஞ்சாவின் சந்தை மதிப்பு சுமார் இரண்டு மில்லியன் கனேடிய டாலருக்கு மேல்," என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
58 வயது மற்றும் 35 வயது நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இன்னும் பரிசீலிக்கப்படவில்லை.
மேலும் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.