இந்தியாவை வாட்டும் கொரோனா; கடந்த 24 மணி நேரத்தில் 3.68 இலட்சம் பேருக்கு தொற்று
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3 இலட்சத்து 68 ஆயிரத்து 147 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் கொரோனா தொற்றினால் ஒரே நாளில் 3,417 பேர் உயிரிழந்துள்ள நிலையில் குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 3 இலட்சத்து 732 ஆக உள்ளது.
இதேவேளை இந்தியாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 கோடியே 99 இலட்சத்து 25 ஆயிரத்து 604-ஆக உள்ளது.
தொற்று பாதிப்பில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 1,62,93,003- ஆக உள்ளதுடன் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 2 இலட்சத்து 18 ஆயிரத்து 959 ஆக உள்ளது.
கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 34 இலட்சத்து 13 ஆயிரத்து 642 ஆகும்.
மேலும் இந்தியா முழுவதும் இதுவரை 15 கோடியே 71 இலட்சத்து 98 ஆயிரத்து 207 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.