பிரிட்டிஷ் கொலம்பிய துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் மூன்று பேர் பலி
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்களில் சந்தேக நபரும் உள்ளடங்குவதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
28 வயதான ஜோர்டன் டானியல் கொக்கிங் என்ற நபர் இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களை மேற்கொண்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
நகரின் பல்வேறு இடங்களிலும் நபர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.
இந்த தாக்குதல் சம்பவங்களில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர் இதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஜோர்டன் டானியலும் ம் உயிரிழந்துள்ளார்.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் அலைபேசி வாயிலாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தவை குறிப்பிடத்தக்கது.
பிரிட்டிஷ் கொலம்பியாவின் லாங்கிலி பகுதியில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.