அமெரிக்காவில் மருத்துவ ஹெலிகாப்டர் விபத்தில் 3 பேர் பலி
அமெரிக்காவில் மருத்துவ சேவைக்கான ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதில் 3 பேர் பலியானதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்கா மிசிசிபி மருத்துவமனையில் நோயாளிகளுக்கு என ஹெலிகாப்டர் சேவை பயன்படுத்தப்பட்டு வருகிறது.
நாட்செஸ் டிரேஸ் பார்க்வே என்ற காட்டுப்பகுதியில் சென்ற ஹெலிகாப்டர் ஒன்றில் , விமானி, மருத்துவ சேவைக்கு என 2 ஊழியர்கள் என மொத்தம் 3 பேர் இருந்தனர்.
ஜார்சனில் இருந்து செயிண்ட் டோமினிக் மருத்துவமனையில் இருந்து 3 பேருடன் புறப்பட்ட இந்த ஹெலிகாப்டர் புறப்பட்ட 27 நிமிடங்களில் விபத்தில் சிக்கியது.
ஹெலிகாப்டர் விபத்தை மருத்துவமனை நிர்வாகம் உறுதிபடுத்தியது. மேலும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களை தொடர்புகொள்ள முயற்சித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.
எனினு விபத்துக்கான காரணம் என்ன என்பது பற்றிய விவரங்கள் வெளியாகாத நிலையில் விசாரணை இடம்பெறுவதாக மருத்துவமனை நிர்வாகம் கூறி இருக்கிறது.