கனடாவில் தொடரும் வன்முறை சம்பவங்கள்!
கனடாவில் அண்மையான நாட்களாக பல்வேறு வன்முறை சம்பவங்கள் இடம் பெற்று வருகின்றன.
அந்த வகையில் மிசிசாகா பகுதியில் இன்றைய தினம் மூன்று பேர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானதுடன் ஒருவர் கத்தி குத்துக்கு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
இந்த சம்பவங்களில் காயமடைந்தவர்களுக்கு உயிர் ஆபத்து கிடையாது என பீல் பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் ஏர்வுட் மற்றும் கமாடோ வீதிகளுக்கு அருகாமையில் சென்று பார்த்தபோது இரண்டு ஆண்கள் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி காயம் அடைந்திருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பின்னர் மற்றும் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானதாகவும் மேலும் ஒருவர் கத்தி குத்துக்கு இலக்கானதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்த சம்பவங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்பற்றவை என நம்புவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதல்கள் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் இருந்தால் அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். 
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        