கனடாவில் திருமண நிகழ்வில் மணப்பெண்ணுக்கு நேர்ந்த அவலம்
கனடாவின் கியூபெக் மாகாணத்தில் திருமண நிகழ்வு ஒன்றின் போது மணப்பெண் உள்ளிட்ட மூன்று பேர் மீது கத்தி குத்து தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
மணப்பெண், மணப்பெண்ணின் தந்தை மற்றும் திருமண நிகழ்வில் பங்கேற்ற விருந்தினர் ஒருவர் இந்த தாக்குதலில் காயமடைந்துள்ளனர்.
ஒன்றோரியோ மாகாணத்தின் மொன்டிரிஜே பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் 27 வயதான நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் இவர் பிரதான சந்தேக நபரின் சகா என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கத்தி குத்து தாக்குதலுக்கு இலக்கான மூன்று பேரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அவர்களுக்கு உயிராபத்து கிடையாது எனவும் வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
திருமண நிகழ்வில் பங்கேற்று சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், பொலிஸாருக்கு வாக்கு மூலங்களை வழங்கியுள்ளனர்.
என்ற காரணத்திற்காக இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என்பது பற்றிய விபரங்கள் வெளியிப்படவில்லை.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.