அமெரிக்காவில் மூடநம்பிக்கையால் 3 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!

United States of America
By Sulokshi May 14, 2022 11:22 AM GMT
Report

அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியா தேவாலயத்தில் பேயோட்டும் சடங்கின் போது 3 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் உயிரிழந்த 3 வயது சிறுமியின் தாத்தா மற்றும் மாமா ஆகியோர் இந்த வாரம் கைது செய்யப்பட்டதாக போலீஸார் நேற்று தெரிவித்தனர்.

அரேலி நவோமி ப்ரோக்டர் என்ற குழந்தை கடந்த வருடம் செப்டம்பரில் இறந்தது. அக் குழந்தை ஒரு தீய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டதாக குடும்ப உறுப்பினர்கள் நம்பியதால், ஒரு சடங்கை நடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது, மூச்சுத்திணறல் காரணமாக ஏற்பட்ட கொலையே இது என மாவட்ட மருத்துவ பரிசோதகர் நீதிமன்றத்திற்கு சம்ர்ப்பித்த ஆவணங்களில் கூறியுள்ளது. சாண்டா கிளாரா மாவட்ட மருத்துவ பரிசோதகர் அலுவலகம் இந்த மரணம் மூச்சுத்திணறல் காரணமாக ஏற்பட்ட கொலை என கூறியுள்ளது.

குழந்தையின் தாத்தா மற்றும் சான் ஜோஸில் உள்ள சிறிய பெந்தேகோஸ்தே தேவாலயமான Iglesia Apostoles y Profetas இன் போதகரான Rene Trigueros-Hernandez மற்றும் குழந்தையின் மாமா ரெனே ஹெர்னாண்டஸ்-சாண்டோஸ் ஆகியோரை பொலிஸார் கைது செய்தனர்.

நீதிமன்ற பதிவுகளின்படி, கிளாடியா ஹெர்னாண்டஸ்-சாண்டோஸ் பொலிஸாரிடம் தனது மகள் எழுந்துவிட்டு கத்துவார் அல்லது அவ்வப்போது அழுவாள் என்பதால் தான் பேய் பிடித்திருப்பதாக நம்புவதாகக் கூறினார். அவளும் அவளுடைய சகோதரனும் குழந்தையை தேவாலயத்திற்கு செப்டம்பர் 24 அன்று அழைத்து வந்து தந்தையுடன் சேர்ந்து பேயோட்டியுள்ளனர்.

இதன்போது தனது மகளின் தொண்டையில் விரலை போட்டு வாந்தி எடுக்க வர வைக்க முயன்றதுடன், தாத்தாவும் மாமாவும் குழந்தையைக் கீழே வைத்திருக்கும் போது சிறுமிக்கு உணவு வழங்காமல் விட்டதாகவும், கழுத்தைப் பிடித்து அழுத்தியதாகவும் குழந்தையின் தாய் குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்நிலையில் மூன்று வயது குழந்தை மூடநம்பிக்கையால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US