ஐரோப்பாவை வாட்டி வதைக்கும் வெப்பநிலை ; நாடொன்றில் 24 மணி நேரத்தில் 3,00,000 இற்கும் மேற்பட்ட மின்னல்கள் !

Heat wave Netherlands Europe
By Sulokshi Jun 30, 2026 12:51 PM GMT
Report

   நெதர்லாந்தில், 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 3,00,000 இற்கும் மேற்பட்ட மின்னல்கள் பதிவாகியுள்ளதாக அந்நாட்டின் வானிலை ஆய்வுத் துறையான KNMI தெரிவித்துள்ளது.

ஐரோப்பா முழுவதும் வரலாறு காணாத அளவுக்கு வெப்ப அலை நிலவி வருகிறது. இதனால், நெதர்லாந்தில் ஒரு வாரத்திற்கும் மேலாக வெப்பநிலை 30°C முதல் 40°C வரை பதிவாகியிருந்தது.

ஐரோப்பாவை வாட்டி வதைக்கும் வெப்பநிலை ; நாடொன்றில் 24 மணி நேரத்தில் 3,00,000 இற்கும் மேற்பட்ட மின்னல்கள் ! | 300 000 Lightning Strikes Netherlands 24 Hours

முதல்முறையாக 'கோட் ரெட்' எச்சரிக்கை

இதையடுத்து, அங்கு முதல்முறையாக 'கோட் ரெட்' எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது.

இந்த அதீத வெப்பமான சூழ்நிலையைத் தொடர்ந்து குளிர்ந்த காற்று உள்ளே நுழைந்ததையடுத்து, அங்கு வளிமண்டலத்தில் ஏற்பட்ட கடுமையான அழுத்த மாறுபாடுகள் மற்றும் காற்றில் இருந்த அதிகப்படியான ஈரப்பதம் ஆகியவை இணைந்து, ஜூன் 28 ஆம் திகதி ஒரு மகா மின்னல் புயலை (Supercell thunderstorm) உருவாக்கின.

இந்தப் புயல் அதன் உச்சக்கட்டத்தை எட்டியபோது, நெதர்லாந்து மற்றும் வடக்கு ஜெர்மனி பகுதிகளில் வெறும் 30 நிமிடங்களில் சுமார் 30,000 மின்னல்களை வெட்டின. அதாவது, ஒவ்வொரு நொடிக்கும் சுமார் 17 மின்னல் தாக்குதல்கள் அரங்கேறியுள்ளன.

இதன்மூலம், 24 மணி நேர இடைவெளியில் மட்டும் துல்லியமாக 3,01,137 மின்னல் வெடிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்தத் தகவலை, நெதர்லாந்து அரச வானிலை ஆய்வு நிறுவனம் (KNMI)உறுதிப்படுத்தியுள்ளது.

நெதர்லாந்தில் கடந்த 2004 ஆம் ஆண்டு மின்னல் பதிவுகள் கணக்கிடத் தொடங்கப்பட்டதிலிருந்து, அனைத்துத் தரவுகளும் முழுமையாகச் சேர்க்கப்பட்டால் இந்தப் புயல் 5 லட்சம் மின்னல்களைத் தொட்டு புதிய சாதனை படைக்கக்கூடும் என வானிலை ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

சுமார், நான்கு மணி நேரம் இந்த மின்னல் வெடிப்புகள் வானில் அழகாய்த் தோன்றினாலும், அதேநேரத்தில் பொதுமக்களுக்கு அச்சமூட்டுபவையாக இருந்தன.

1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US