மது மற்றும் போதைப் பொருட்களால் ஆண்டும் 32 லட்சம் மக்கள் உயிரிழப்பு!
உலகளவில் மது மற்றும் போதைப் பொருட்கள் உட்கொள்வதால் ஒவ்வொரு ஆண்டும் 32 லட்சம் மக்கள் உயிரிழப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
மது அருந்துவதால் மட்டும் உலக முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் 26 லட்சம் மக்கள் உயிரிழப்பதாகவும், போதைப் பொருட்களால் 6 லட்சம் மக்கள் உயிரிழப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மது மற்றும் போதைப் பொருட்களால் உயிரிழப்பவர்களில் பெரும்பாலானோர் ஆண்கள் தான். மது அருந்துவதால் 20 லட்சம் ஆண்களும் கஞ்சாவினால் 4 லட்சம் ஆண்களும் ஒவ்வொரு ஆண்டும் உயிரிழக்கின்றனர்.
மக்கள் குறைந்த வருமானம் பெறும் நாடுகளில் அதிகமானோர் மதுவினால் உயிரிழக்கின்றனர்.
மக்கள் அதிக வருமானம் பெறும் நாடுகளில் குறைவான அளவிலேயே மதுவினால் ஏற்படும் உயிரிழப்புகள் உள்ளது.
2019 ஆம் ஆண்டு எடுத்த தரவுகளின் அடிப்படையில் உலக சுகாதார நிறுவனம் இதை தெரிவித்துள்ளார்.