கியூபெக்கில் பாரிய தீ விபத்து;நான்கு பேர் உடல் கருகி பலி
கனடாவின் கியூபெக்கில் இடம்பெற்ற பாரிய தீ விபத்துச் சம்பவத்தில் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
கியூபெக் மாகாணத்தின் செய்ன்டி ஜுலியானாவில் அமைந்துள்ள வீடொன்றில் இந்த விபத்துச் சம்பவம் பதிவாகியுள்ளது.
வீடு ஒன்று தீப்பற்றிக் கொண்டுள்ளதாக கிடைக்கப் பெற்ற தகவலை அடுத்து தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்த போது வீடு முற்று முழுதாக தீக்கிரையாகியிருந்தது என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த வீட்டிலிருந்து நான்கு சடலங்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.
இந்த உயிரிழந்த நபர்களின் ஆள் அடையாள விபரங்களோ அல்லது வயது விபரங்களோ இதுவரையில் கண்டறியப்படவில்லை.
இந்த தீ விபத்திற்கான காரணத்தை கண்டறியும் நோக்கில் விசாரணைப் பிரிவினர் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் மற்றும் அயலவர்களிடமும் தகவல்கள் திரட்டப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.