சுவிஸில் மேலும் 4 பேர் கொரோனாவால் மரணம்!
சுவிஸில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனாவால் (Covid-19) 3,922 பேர் பாதிக்கப்பட்டதோடு 4 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுவிஸில் இதுவரை மொத்தமாக 9 இலட்சத்து 09 ஆயிரத்து 34 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 11ஆயிரத்து 333 பேர் மரணமடைந்துள்ளனர்.
சுவிஸில் தற்போது வரை Covid-19 தொற்றினால் பாதிக்கப்பட்டு 55ஆயிரத்து 891 பேர் அங்குள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 114 பேர் தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக தெரியவந்துள்ளது.
சுவிஸில் கடந்த 24 மணித்தியாலத்தில் 2,134 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரையில் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 8 இலட்சத்து 41 ஆயிரத்து 810 ஆக உயர்ந்துள்ளது.