நோர்வே இளவரசியின் மகனுக்கு 4 வருட சிறை
பாலியல் குற்றச்சாட்டில் , நோர்வேயின் இளவரசி மெட்டே மேரிட்டின் 29 வயது மகனான மரியஸ் போர்க் ஹோய்பிக்கு நான்கு வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இரண்டு பாலியல் குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதை அடுத்து, அவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

ஒஸ்லோ மாவட்ட நீதிமன்றத்தின் 250 எண் கொண்ட நீதிமன்ற அறையில் இருந்த மூன்று நீதிபதிகள், அவர் மீதான மற்ற இரண்டு பாலியல் குற்றச்சாட்டுகளில் இருந்தும் அவரை விடுவித்தனர்.
எனினும் இளவரசியின் மகன் மீது சுமத்தப்பட்டிருந்த பிற குற்றச்சாட்டுகள் பலவற்றில் அவர் குற்றவாளி என தீர்ப்பளித்தனர். தீர்ப்பு வழங்கப்பட்டபோது ஹோய்பி நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்பதுடன், காணொளி வாயிலாக வழக்கு அமர்வில் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.