சூப்பர்காரில் அதி வேகத்தில் சென்ற கோடீஸ்வரர்; ஏற்பட்டுள்ள சிக்கல்!
ஜேர்மனியில் சூப்பர்காரில் அதி வேகத்தில் சென்ற கோடீஸ்வரரு சிறைத்தண்டனை விதிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
உலகின் அதிவேகக் கார்களில் ஒன்றான புகாட்டி சிரோன் காரின் விலை 22 கோடியே 39 இலட்ச ரூபாயாகும். 1500 குதிரைத் திறன் கொண்ட இந்தக் காரில் மணிக்கு 420 கிலோமீட்டர் வேகம் வரை செல்லலாம்.
செல்வந்தரான ராடிம் பாசர் பெர்லின் - ஹனோவர் இடையே நேரான ஆறுவழிச் சாலையில் இந்தக் காரில் மணிக்கு 417 கிலோமீட்டர் வேகத்தை எட்டியுள்ளார்.
ஜேர்மனி autobahn நெடுஞ்சாலையில் வேகக் கட்டுப்பாடு கிடையாது எனினும், பாசர் மணிக்கு 417 கிலோமீட்டர் வேகத்தில் சென்றது பாதுகாப்புக் குறித்த கவலையை எழுப்பியுள்ளது.
அந்த பயணத்தின்போது பாதுகாப்பு முக்கியமானது என்றும், தான் சென்றபோது சாலை காலியாக இருந்ததாகவும், நல்ல பார்வைப் புலப்பாடு இருந்ததாகவும் பாசர் தனதுக் கருத்தினைத் தெரிவித்துள்ளார்.
அதேநேரத்தில் கார்பந்தய வீரர் செபஸ்டியன் வெட்டல் உட்படப் பலர் ஜெர்மன் autobahn நெடுஞ்சாலைகளில் வேகக் கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.