பிரான்ஸில் மேலும் 47 பேர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு!
பிரான்ஸில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனாவால் (Covid-19) 19,778 பேர் பாதிக்கப்பட்டதோடு 47 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரான்ஸில் இதுவரை மொத்தமாக 73 இலட்சத்து 10 ஆயிரத்து 664 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 1 இலட்சத்து 18 ஆயிரத்து 271 பேர் மரணமடைந்துள்ளனர்.
பிரான்ஸில் தற்போது வரை Covid-19 தொற்றினால் பாதிக்கப்பட்டு 1 இலட்சத்து 70 ஆயிரத்து 323 பேர் அங்குள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 1,049 பேர் தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக தெரியவந்துள்ளது.
பிரான்ஸில் கடந்த 24 மணித்தியாலத்தில் 6,458 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரையில் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 70 இலட்சத்து 22 ஆயிரத்து 70 ஆக உயர்ந்துள்ளது.