டொராண்டோவில் கத்தி குத்து தாக்குதல் 5 பேர் காயம்
கனடாவின் டொராண்டோ நகரின் நோர்த் யோர்க் பகுதியில் இடம்பெற்ற கத்தி குத்து தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்துள்ளனர்.
திங்கள்கிழமை இரவு இடம்பெற்ற சம்பவத்தில் ஐந்து பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர்களில் மூவர் குத்துக்காயங்களுடன் ஆபத்தான நிலையில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இரவு சுமார் 9:45 மணியளவில் பாதர்ஸ்ட் வீதி மற்றும் ஸ்டீல்ஸ் அவென்யூ வெஸ்ட் சந்திப்புப் பகுதியில் உள்ள ஒரு இல்லத்தில் ஏற்பட்ட சம்பவம் குறித்து அழைப்பு கிடைத்தது.
சம்பவம் பிளம் ட்ரீ வே (Plum Tree Way) எனப்படும் குடியிருப்பு பகுதியில் இடம்பெற்றதாகவும், அது பாதர்ஸ்ட் வீதி மற்றும் ஃபின்ச் அவென்யூ வெஸ்ட் அருகில் அமைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நான்கு பேர் பல்வேறு அளவிலான காயங்களுடன் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாகவும், அவர்களில் மூவருக்கு குத்துக்காயங்கள் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், மொத்தம் ஐந்து பெரியவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதில் மூவர் உயிருக்கு ஆபத்தான நிலையில், ஒருவர் லேசான காயங்களுடன், மேலும் ஒருவர் மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளார்.
காயமடைந்தவர்களின் பாலின விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
சம்பவ இடத்துக்கு அருகில் பெருமளவிலான பொலிஸ் படையினர் முகாமிட்டுள்ளனர். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.