அமெரிக்கா கடற்கரையில் விழுந்து நொறுங்கிய ஹெலிகாப்டர்
அமெரிக்காவின் கலிபோர்னியாவின் ஹண்டிங்டன் கடற்கரையில் ஹெலிகாப்டர் ஒன்று விழுந்து நொறுங்கியதில் ஐவர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
உள்ளூர் நேரப்படி நேற்று பிற்பகல் இச் சம்பவம் இடம்பெற்றுது.
ஹெலிகாப்டர், கடற்கரைப் பகுதியில் வாகன நிறுத்துமிடத்தில் விழுந்து நொறுங்கியதாக ஹங்டிங்டன் பீச் பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.
ஹெலிகாப்டரில் இருந்த இருவர் இடிபாடுகளிலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாகவும் தரையில் இருந்த மூவரும் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று நடைபெறவிருந்த ‘கார்ஸ் ‘என் காப்டர்ஸ் ஆன் தி கோஸ்ட்’ (Cars ‘N Copters on the Coast) நிகழ்ச்சியில் விழுந்து நொறுங்கிய விமானம் இடம்பெறவிருந்தது.
அந்நிகழ்ச்சியில் மாறுபட்ட அதிநவீன கார்களும் ஹெலிகாப்டர்களும் இடம்பெறும் என்று தெரியவந்தது.