கனடாவில் இடம்பெற்ற பயங்கர பஸ் விபத்து
கனடவின் மொன்றியலின் லாவல் பகுதியில் பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில் எட்டு பேர் படுகாயமடைந்துள்ளனர்.
படுகாயமடைந்தவர்கள் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் இடம்பெற்றதனை தொடர்ந்து குறித்த இடத்திற்கு ஒன்பது அம்பியூலன்ஸ்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இந்த விபத்திற்கான காரணங்கள் எதுவும் இதுவரையில் கண்டறியப்படவில்லை. இந்த பஸ் சாரதி கைது செய்யப்பட்டாரா இல்லையா என்பது பற்றிய விபரங்களை பொலிஸார் வெளியிடவில்லை.
விபத்தில் சிக்கி காயமடைந்தவர்களில் குறைந்தபட்சம் ஒரு சிறுவர் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்த விபத்துச் சம்பவம் மிகவும் துயரமளிப்பதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் Francois Bonnardel தெரிவித்துள்ளார்.