காசா மருத்துவமனை மீது தாக்குதல் ; 5 ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட 20 பேர் பலி
இஸ்ரேலிய படையினர் காசா மருத்துவமனையின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஐந்து ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட இருபது பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
மருத்துவமனையின் நான்காம் மாடி மீது இரண்டு ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
அல்ஜசீரா, ரொய்டர்ஸ் உள்ளிட்ட சர்வதேச ஊடகங்களைச் சேர்ந்த ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
கடந்த 2023ம் ஆண்டு முதல் காசாவில் சுமார் 273 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இஸ்ரேலியப் படையினரால் காசாவில் ஊடகவியலாளர்கள் இலக்கு வைக்கப்படுவதனை பல்வேறு மனித உரிமை அமைப்புக்கள் கண்டனம் வெளியிட்டுள்ளன.
இதேவேளை, பத்திரிகையாளர்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்படவில்லை என இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது.
காசாவில் 22 மாதங்களாக நடந்து வரும் இஸ்ரேலின் கொடூரமான போரில், 62,000-க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்,
இதில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள். இஸ்ரேலின் பிரதமர் நெதன்யாகு மற்றும் அவரது முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கல்லன்ட் ஆகியோருக்கு போர்க்குற்றங்களுக்காக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது வாரண்ட் வழங்கியுள்ளது.