மலையேற்றத்தின்போது காணாமல் போன 5 ரஷ்ய வீரர்கள் சடலமாக மீட்பு!
நேபாளத்தில் இருந்து இமயமலை சிகரத்தை நோக்கி மலையேற்றத்தின்போது மாயமான ரஷ்ய வீரர்கள் 5 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
ரஷ்யாவை சேர்ந்த 5 மலையேற்ற வீரர்கள் கடந்த 6ம் தேதி நேபாளத்தில் இருந்து இமயமலையின் தளகிரி சிகரத்தை நோக்கி பயணத்தை தொடங்கினர்.
முகாமிலிருந்து காலை 6 மணிக்கு பயணத்தை தொடங்கிய வீரர்கள் உடனான ரேடியோ தொடர்பு காலை 11 மணியளவில் துண்டிக்கப்பட்டது.
இதையடுத்து மாயமான மலையேற்ற வீரர்களை தேடும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டன.
இந்நிலையில், மாயமான மலையேற்ற வீரர்கள் 5 பேரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
ஹெலிகாப்டர் மூலம் நடைபெற்ற தேடுதல் பணியின்போது மலையின் 7 கிலோமீட்டர் உயரத்தில் 5 பேரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளது.