50 ஆவது ஆண்டு திருமணநாளில் மனைவிக்கு ஆச்சர்யமளித்த கணவர்! பரிசால் திக்குமுக்காடிய மனைவி
அமெரிக்காவைச் சேர்ந்த லீ வில்சன் (Lee Wilson) என்பவர் 50ஆவது ஆண்டுத் திருமண நிறைவு நாளைக் கொண்டாட மனைவிக்குச் சூரியகாந்தித் தோட்டத்தைப் பரிசாக அளித்து, அமனைவியை பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளார்.
லீ வில்சன் (Lee Wilson) பரிசைப் பார்த்து வில்சனின் மனைவி ரெனெ (Renee) இன்ப அதிர்ச்சி அடைந்தார்.
மகனின் உதவியுடன் லீ வில்சன் 1.2 மில்லியன் சூரியகாந்திச் செடிகளை 80 ஏக்கர் நிலப்பரப்பில் நட்டுவைத்தார். அதனை மனைவிக்குத் தெரியாமல் மே மாதம் முதல் வில்சன் அந்தப் பணியில் ஈடுபட்டிருந்தார்.
இந்நிலையில் கணவரின் அன்பு பரிசு தொடர்பில் மனைவி கூறுகையில்,
"அந்தப் பரிசு கிடைத்ததில் எனக்குப் பேரின்பம். சூரியகாந்தித் தோட்டத்தை விட ஒரு சிறந்த அன்பளிப்பு கிடைத்திருக்க இயலாது என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.