கனடாவில், 55 மற்றும் 70 மில்லியன் டொலர் லொத்தரில் பரிசு வென்றவர்கள் யார்?
கனடாவில் அண்மையில் இடம்பெற்ற லொத்தர் சீட்டிலுப்பில் 55 மில்லியன் மற்றும் 70 மில்லியன் டொலர் பரிசு வென்ற அதிர்ஸ்டசாலிகள் இன்னமும் பரிசு பெறவில்லை.
இந்த அதிர்ஸ்டசாலிகள் யார் என தேடப்பட்டு வருகின்றனர். கடந்த ஜூன் மாதம் 28ம் திகதி இடம்பெற்ற லொத்தர் சீட்டிலுப்பில் ஒரு வெற்றியாளர் 70 மில்லியன் டொலர்களை வென்றிருந்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை மற்றுமொரு அதிர்ஸ்டசாலி 55 மில்லின் டொலர்களை வென்றுள்ளார்.
எனினும் இந்த இரண்டு வெற்றியாளர்களும் இதுவரையில் தங்களது பரிசிற்காக உரிமை கோரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு வெற்றிப் பரிசுத் தொகையை எவரும் உரிமை கோரத் தவறினால் அது எதிர்கால வெற்றியாளர்களுக்கு போனஸ் தொகையாகவும், லொத்தர் சீட்டு மேம்படுத்தல் நடவடிக்கைகளுக்காகவும் பயன்படுத்தப்பட உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.