பிரான்ஸில் 24 மணித்தியாலத்தில் 59 ஆயிரம் பேர் பாதிப்பு!
பிரான்ஸில் கொரோனா வைரஸ் தொற்றினால் 24 மணிநேரத்தில் 59, 019 பேர் பாதிக்கப்பட்டதோடு 172 பேர் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரான்ஸில் இதுவரை மொத்தமாக 79இலட்சத்து 87ஆயிரத்து 591 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 1 இலட்சத்து 19 ஆயிரத்து 899 பேர் உயிரிழந்துள்ளனர்.
பிரான்ஸில் தற்போது வரை Covid-19 தொற்றினால் பாதிக்கப்பட்டு 6 இலட்சத்து 56 ஆயிரத்து 461 பேர் அங்குள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு 2,351 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பிரான்ஸில் 20,102 பேர் கடந்த 24 மணித்தியாலத்தில் குணமடைந்துள்ள நிலையில், இதுவரையில் வைரஸ் தொற்றிலிருந்து 72இலட்சத்து 11ஆயிரத்து 231 பேர் குணமடைந்துள்ளனர்.