சாதிக்க வயது தடையில்லை... நிரூபித்து காட்டிய 59 வயதான கனேடிய பெண்மணி!
சாதனை படைக்க வயது தடையல்ல என்பதை கனடாவைச் சேர்ந்த 59 வயதான பெண்மணி நிரூப்பித்து கண்பித்துள்ளார்.
கனடாவை சேர்ந்த 59 வயதான டோனாஜீன் வையில்டின் கடந்த வாரம் 60 நிமிடங்களில் 1,575 புஷ்-அப்களை முடித்து தனது 2-வது உலக சாதனையை படைத்துள்ளார்.
ஒவ்வொரு புஷ்-அப்பிற்கும், புஷ்-அப்பின் அடிப்பகுதியில் 90 டிகிரி முழங்கை வளைவு மற்றும் மேலே தள்ளும் போது முழு கை நீட்டிப்பு தேவை என்கிற நிபந்தனைகளுடன் டோனாஜீன் இந்த சாதனையை படைத்துள்ளார்.
டோனாஜீன் வையில்டின் ஏற்கனவே புஷ்-அப்பில் உலக சாதனை படைத்திருந்தார்.
இது தொடர்பில் அவர் கூறுகையில்,
`நான் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன். நான் என்னை வலுவாக உணர்ந்தேன்.
அடுத்த 17 நிமிடங்களில் அதிக எண்ணிக்கையிலான புஷ்-அப்களை முடிக்க இலக்கு வைத்துள்ளேன் என்றார். டோனாஜீனுக்கு 12 பேரக்குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.