இத்தாலி கடலில் நேர்ந்த பெரும் சோகம் ; படகு கவிழ்ந்து 6 அகதிகள் பலி 40 அகதிகள் மாயம்
வட ஆப்பிரிக்க நாடான துனிசியாவில் இருந்து சுமார் 60 அகதிகளுடன் ஒரு படகு இத்தாலி நோக்கி சென்று கொண்டிருந்த போது கடலில் படகு கவிந்ததில் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன் 40 பேர் மாயமாகியுள்ளதாக கடலோர பொலிசார் தெரிவித்துள்ளனர்.
அப்போது ராட்சத அலை தாக்கி அந்த படகு நடுக்கடலில் கவிழ்ந்தது. தகவலறிந்த கடலோர பொலிசார் அங்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
காணாமல் போணவர்களை தேடும் பணியில் மீட்பு படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
ஆப்பிரிக்க நாடுகளில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் ஏராளமானோர் அகதிகளாக ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழைகின்றனர். அவ்வாறு செல்பவர்கள் பெரும்பாலும் சட்ட விரோத பயணத்தையே மேற்கொள்கின்றனர்.
எனினும் இந்த சட்ட விரோத பயணங்கள் தொடர் கதையாக உள்ளது. அவற்றில் பல பயணங்கள் ஆபத்தில் முடிகின்றன. எனவே இதனை கட்டுப்படுத்த கடலோர பொலிசார் தீவிர விசாரணையில் ஈடுபடுகின்றனர்.