நைஜீரியாவில் படகு மூழ்கியதில் 60 பேர் பலி
வட மத்திய நைஜீரியாவில் 80 பேரை ஏற்றிச் சென்ற படகு மூழ்கியதில் 60 பேர் உயிரிழந்தனர்.
நைஜீரியாவின் வட- மத்திய நைஜர் மாநிலத்தில் பயணிகள் 80 பேரை ஏற்றிச் சென்ற படகே இவ்வாறு விபத்துக்குள்ளானது.
மலாலே மாவட்டத்தில் உள்ள துங்கன் சுலேவிலிருந்து துக்காவுக்கு துக்க நிகழ்ச்சிக்கு சென்ற போது குறித்த விபத்து நிகழ்ந்துள்ளது.
இந்த விபத்தில் 60 பேர் உயிரிழந்துள்ளதுடன் பத்து பேர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டுள்ளனர்.
மேலும் பலர் இன்னும் தேடப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த படகு அதிக சுமையுடன் பயணித்தமையே இவ் விபத்திற்கான காரணம் என்பது விசாரணையில் தெரியவந்தது.
நைஜீரியாவில், அண்மைக்காலமாக படகு விபத்துக்கள் அதிகளவில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பித்தக்கது.