காசாவில் உதவி பெற முயன்ற 613 பேர் கொலை ; ஐ.நா வெளியிட்ட பகீர் தகவல்
கடந்த மே மாதத்தில் இருந்து காசாவில் நிவாரண உதவி பெற முயன்ற 613 பாலஸ்தீனியர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது.
உணவு விநியோக மையங்களை நிர்வகிக்கும் போர்வையில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ஆதரவு விநியோக மையங்களில் அப்பாவி மக்கள் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள்.
மரணப் பொறிகளாக மாறிய விநியோக மையங்கள்
கடுமையான பசி காரணமாக அவை மரணப் பொறிகள் என்பதை அறிந்தும், மக்கள் கூட்டம் கூட்டமாக விநியோக மையங்களுக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
அவர்கள் மீது துப்பாக்கிகள் மற்றும் கையெறி குண்டுகளைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்துவதாகவும் ஐநா குற்றம் சாட்டியுள்ளது.
இதனுடன் அல்-மவாசியில் உள்ள அகதிகள் முகாமில் நடந்த குண்டுவெடிப்பில் கான் யூனிஸ் 15 பேரும், காசா நகரில் அகதிகள் தங்கியிருந்த பள்ளியில் மேலும் 15 பேரும் கொல்லப்பட்டனர்.
காசாவில் கொல்லப்பட்ட பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை 57,000 ஐ கடந்துள்ளது. 1,34,611 பேர் காயமடைந்தனர்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 60 நாள் போர் நிறுத்தத்தை முன்மொழிந்ததிலிருந்த சூழலில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.