அமெரிக்காவில் இருந்து பர்மாவுக்கு நாடு கடத்தப்பட்ட புலம்பெயர்ந்தோர் விடுவிப்பு
அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்டு பனாமாவில் பல வாரங்களாகத் தங்க வைக்கப்பட்டிருந்த 65 புலம்பெயர்ந்தோர் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் மத்திய அமெரிக்காவை விட்டு வெளியேற ஒரு மாதகால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் தேவையேட்படின் 90 நாட்கள் வரை அவர்களுக்கான கால அவகாசத்தை நீடிக்க முடியும் என பனாமா அரசு குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்மூலம் அவர்கள் தங்களது சொந்த நாடுகளுக்கு செல்வதற்கான நடவடிக்கைகளை சட்டரீதியாக முன்னெடுக்க முடியும் எனவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்தியா, நேபாளம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், சீனா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுமார் 299 புலம்பெயர்ந்தோர் பனாமாவில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த குழுவினர் அமெரிக்கா மற்றும் பனாமா ஆகிய நாடுகளுக்கிடையில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், மூன்று விமானங்கள் மூலம் பனாமாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர்.
அத்துடன், 299 புலம்பெயர்ந்தோரில் 171 பேர் மாத்திரமே தங்களது சொந்த நாடுகளுக்குச் செல்வதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.