துபாயில் இடம்பெற்ற கோர விபத்தில் 7 இந்தியர்கள் உயிரிழப்பு
துபாயில் லொறி மீது பஸ் மோதி விபத்துக்குள்ளானதில் இந்திய தொழிலாளர்கள் 7 பேர் உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன .
பஸ் சாரதியின் கவனக்குறைவினாலும் முன்னால் செல்லும் வாகனங்களுக்கு இடையே போதிய இடைவெளியை பேணாததாலும் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக துபாய் போக்குவரத்து பாதுகாப்புத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

பஸ் அதன் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் நின்றிருந்த லொறியின் பின்புறத்தில் மோதியதால் ஏழு இந்திய தொழிலாளர்கள் உயிரிழந்ததோடு மேலும் 9 பேர் காயமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு துபாயில் உள்ள இந்திய தூதரகம் இரங்கல் தெரிவித்துள்ளது. அத்துடன் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை தூதரக அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.