வன்முறையில் 7 வயது சிறுமி உயிருடன் எரித்துக் கொலை
வங்கதேசத்தில் வன்முறைக் கலவரத்தில் வீட்டுக்குத் தீவைக்கப்பட்டதில் 7 வயது சிறுமி உடல் கருகி பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வங்கதேசத்தில் மாணவர் அமைப்பின் தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து, நாடு முழுவதும் கலவரம் வெடித்தது.

வன்முறைக் கும்பல்
இந்த நிலையில், சனிக்கிழமையில் ஏற்பட்ட வன்முறையின்போது, லட்சுமிபூர் சதார் பகுதியில் உள்ள தேசியவாதக் கட்சித் தலைவர் பெலால் ஹொசைனின் வீட்டை வெளியிலிருந்து பூட்டிவிட்டு, வன்முறைக் கும்பல் தீவைத்தனர்.
வீடு தீப்பற்றி எரியும் நிலையில், வீட்டின் வெளிப்புறத்தில் பூட்டப்பட்டிருந்ததால், பெலாலும் அவரின் 3 மகள்களும் தீயில் சிக்கிக் கொண்டனர். இந்தச் சம்பவத்தில் 7 வயது சிறுமி தீயில் கருகி பலியானார்.
இதனைத் தொடர்ந்து, பெலால் மற்றும் அவரின் மற்ற 14 மற்றும் 16 வயதான இரு மகள்களையும் மீட்ட அப்பகுதியினர், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இருப்பினும், பெலாலின் மற்ற இரு மகள்களும் 50 முதல் 60 தீக்காயங்களுடன் மோசமான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் கூறினர்.
இந்தச் சம்பவம் குறித்து விசாரணையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.