ஹாமில்டனில் தீ விபத்தில் முதியவர் உயிரிழப்பு
கனடாவின் ஹாமில்டன் நகரில் ஏற்பட்ட வீட்டு தீ விபத்தில் 70 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்தார்.
ஸ்படினா அவென்யூ பகுதியில், டன்ஸ்மூர் ரோடு மற்றும் கேஜ் அவென்யூ தெற்கு சந்திப்புக்கு அருகே உள்ள வீட்டில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த தீ விபத்தில் வீட்டில் வசித்து வந்த ஒருவர் கடுமையாக காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

பின்னர் வெளியிடப்பட்ட தகவலில், அந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
தீ சேதம் வீட்டின் ஒரு அறைக்குள் மட்டுமே ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
தீ ஏற்பட்ட காரணம், தொடங்கிய இடம் மற்றும் சம்பவ சூழ்நிலைகள் குறித்து தற்போது வரை தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
எனினும், தற்போது குற்றச்செயல் இடம்பெற்றதாக எந்த சந்தேகமும் இல்லை என்று பொலிஸார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளனர்.