சாலையில் நடந்து சென்ற 70 வயது மூதாட்டிக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்
ரஷியாவில் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த 70 வயது மூதாட்டியிடம் இருந்து பையை கொள்ளையடிக்க திருடன் முயற்சித்த சம்பவம் அங்குள்ள சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளது.
ரஷிய தலைநகர் மாஸ்கோவின் ஒஸ்டஹன்ஹா நகரில் நேற்று முன் தினம் இரவு 70 வயது நிரம்பிய மூதாட்டி தனியாக நடந்து சென்றுள்ளார்.
அப்போது, அவரை பின் தொடர்ந்து வந்த 22 வயது நிரம்பிய இளைஞன் மூதாட்டி தனது கையில் வைத்திருந்த பையை பறித்து செல்ல முயற்சித்துள்ளான்.
திருடன் தனது பையை பறித்து செல்ல முயற்சித்ததை உணர்ந்த மூதாட்டி அந்த திருடனுடன் போராடியுள்ளார். இதில், அந்த திருடன் மூதாட்டியை சாலையில் தள்ளிவிட்டு பையை பறிக்க முயற்சித்துள்ளான்.
70 years old Russian grandma, overpowers young street mugger#Russian #russia #russiangrandma #70yearsoldrussiangradma #streetmugger #theift #Grandma #Moscow pic.twitter.com/X9FLmvx0tR
— NTV Houston (@NTV_Houston) September 23, 2021
ஆனால், திருடனிடம் எதிர்த்து போராடிய மூதாட்டி சாலையில் விழுந்த போதும் சண்டையிட்டுள்ளார். சாலையில் மூதாட்டியை இழுத்து சென்ற திருடன் பையை பறிக்க முயற்சித்துள்ளான்.
ஆனால், மூதாட்டியின் எதிர்ப்பால் திருடனால் பையை திருட முடியவில்லை. அப்போது, சாலையில் மறுபுறம் வந்துகொண்டிருந்த ஒரு நபர் மூதாட்டியிடம் திருடன் திருட முயற்சிப்பதை கண்டுள்ளார். உடனடியாக அந்த நபர் திருடனை பிடிக்க முயற்சித்துள்ளார்.
இதனை தொடர்ந்து மூதாட்டியிடம் திருடும் முயற்சியை கைவிட்ட அந்த இளைஞன் அங்கிருந்து தப்பியோடிவிட்டான்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த பொலிஸார் மூதாட்டியிடம் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட இளைஞனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.