7 இலட்சம் ரஷ்ய வீரர்கள் உயிரிழப்பு ; உக்ரைன் போரின் விளைவு
உக்ரைனுக்கு எதிரான மோதலில் இதுவரை 7 இலட்சத்திற்கும் அதிகமான ரஷ்ய வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
2022 பெப்ரவரி முதல் 2026 செப்டம்பர் வரையிலான காலப்பகுதியில் ரஷ்ய அரசாங்கப் பதிவுகளில் குறைந்தது 4,90,000 இராணுவ வீரர்களின் இறப்புகள் அதிகாரப்பூர்வமாகப் பதிவாகியுள்ளதாக, ரஷ்யாவின் ரோஸ்ஸ்டாட்டின் தரவுத்தளத்தை ஊடுருவிய இரண்டு ஹேக்கர் குழுக்கள் கண்டறிந்துள்ளன.

வீரர்களின் உயிரிழப்பு
பெலாரஸ்ய எதிர்க்கட்சியுடன் தொடர்புடைய சைபர் பார்ட்டிசன்ஸ் என்ற ஹேக்கர் குழுவும், உக்ரேனிய ஹேக்கிங் குழுவான சைலன்ட் க்ரோவும் இந்தப் பதிவுகளைப் பெற்றுள்ளன.
இறப்புகளைப் பதிவு செய்வதில் காலதாமதம் மற்றும் போர்க்களத்தில் காணாமல் போய் உயிரிழந்திருக்கக்கூடிய வீரர்களின் எண்ணிக்கையையும் கணக்கில் கொண்டால், மொத்த உயிரிழப்பு 7,00,000 முதல் 7,20,000 வரை இருக்கலாம் என மதிப்பிட்டுள்ளனர்.
ரஷ்யாவும் உக்ரைனும் தங்கள் இராணுவத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் குறித்த விரிவான, அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களை வெளியிடுவதை பெரும்பாலும் தவிர்த்து வருகின்றன.
உக்ரைனை விட ரஷியாவின் உயிரிழப்புகள் கணிசமாக அதிகமாக இருக்கும் என்று மேற்கத்திய மதிப்பீடுகள் நீண்ட காலமாகவே சுட்டிக்காட்டி வருகின்றன. மேலும், மே மாத தொடக்கத்திலேயே கிட்டத்தட்ட 500,000 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டதாக பிரிட்டிஷ் உளவுத்துறை மதிப்பிட்டிருந்தது.