பிரித்தானிய நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டுள்ள 8 தமிழர்கள்!
பிரித்தானிய நாடாளுமன்ற தேர்தல் இன்றையதினம் (04-07-2024) விறுவிறுப்பாக நடைபெறுகிறது. 650 உறுப்பினர்களை கொண்ட பிரித்தானிய நாடாளுமன்ற தேர்தலில் இந்த முறை 8 தமிழர்கள் களம் காண்கின்றனர்.
உமா குமரன், கவின் ஹரன், மயூரன் செந்தில் நாதன், கமலா குகன், டெவினா பால், நரணி ருத்ரா ராஜன், கிரிஷ்ணி, ஜாஹிர் உசேன் ஆகியோர் பிரித்தானிய நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.
இந்த தேர்தலில் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று கருத்துக் கணிப்பு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டது.
பிரித்தானிய கடந்த 15 ஆண்டுகளாக கன்சர்வேடிவ் கட்சி ஆட்சி செய்து வந்தது.
இந்த நிலையில், கருத்துக் கணிப்பு முடிவுகளின் படி எதிர்கட்சியான தொழிலாளர் கட்சி ஆட்சிக்கு வரும் போது 15 ஆண்டுகால கன்சர்வேடிவ் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.